இன்றைய செய்தி

Post Top Ad

03 June 2022

யாழில் மற்றுமொரு சிறுமி மாயம் பதறும் பெற்றோர்.


 

யாழ்ப்பாணம் - வேலணை, சரவணை பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


குறித்த சிறுமி தனியார் வகுப்பிற்குச் சென்ற நிலையில், காணாமல் போயுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் சிறுமியின் உறவினர்கள் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.


 இந்நிலையில் காணாமல் போன சிறுமியை தேடும் பணியினை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். அதேவே:ளை நாட்டில் அண்மை நாட்களில் சிறுவர், சிறுமியர்கள் காணாமல் போவது அதிகரித்துள்ள நிலையில் பெற்றோர்கள் பத்ற்றத்தில் உள்ளனர்.


 அதேவேளை அட்டுலுகம பகுதியில் காணாமல் போன 9 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் முழு நாட்டையுமே உலுக்கியிருந்தது . அதேபோல் வவுனியாவில் காணாமல் போன 16 வயதுடைய சிறுமி மறுநாள் கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.


 இவ்வாறான நிலையில் யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமி காணாமல் போயுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



No comments:

Post a Comment

Post Top Ad