இன்றைய செய்தி

Post Top Ad

26 August 2021

மேலும் 198 மரணங்கள் பதிவு..!!

 


 

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பாக மேலும் 198 மரணங்கள் நேற்றைய தினம் (24) பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார் ,இதனை அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி இலங்கையில் ஏற்கனவே 7,750 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில், தற்போது நேற்றைய தினம் பதிவாகியுள்ள 198 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 7,948 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இவ்வாறு மரணமடைந்த 198 பேரில், 119 ஆண்கள், 79 பெண்களோடு, 60 வயதுக்கு மேற்பட்டோர் 146 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Post Top Ad