கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமை படுத்தப்பட்டுள்ள நோயாளர்கள் சுகாதார நிபுணர்களினால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றுமாறு சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரஞ்சித் படுவந்துடாவ இதனை கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலே அவர் இதனை கூறியுள்ளார்.
மூச்சுத் திணறல் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் தொடர்பாக அடக்கடி கவனம் செலுத்த வேண்டும். எந் நேரத்திலும், அவசர சேவை நிலையத்தில் உள்ள நிபுணர்களை அழைத்து ஆலோசனை பெற நோயாளிகள் தயங்கவோ, அச்சப்படவோ வேண்டாம் என அவர் மேலும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment