இன்றைய செய்தி

Post Top Ad

26 August 2021

தடுப்பூசி தொடர்பாக வெளியான தகவல்..!!!

 



கொரோனா வைரஸிற்கு எதிராக இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்களுக்கு தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு குறைந்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 

இதன்படி பைஸர் அல்லது அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளின் இரண்டையும் பெற்ற ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களிடையே குறித்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அந்த பரிசோதனையின் முடிவுகளிளே இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது 
மே மற்றும் ஜூலை மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் தரவை அடிப்படையாக கொண்டே குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி பைஸர் தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றுக்கொண்டவர்களில் 88% உள்ள ஒருவரின் பாதுகாப்பு தன்மை ஒரு மாதத்தில் லிருந்து ஐந்து முதல் ஆறு மாதங்களில் 74% ஆகக் குறைந்துள்ளமை தெரியவந்துள்ளது. 

இதேவேளை அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பொறுத்தவரை, நான்கு முதல் ஐந்து மாதங்களில் 77% இல் இருந்து 67% ஆக குறைவடைந்துளளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad