யாழ்ப்பாணத்தில் கொவிட் நோய்த் தொற்றோடு மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக யாழ் மாவட்ட செயலாளகத்தின் கொவிட்-19 புள்ளி விபர அறிக்கை அடிப்படையில் இவ் விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி நேற்று முன்னைய தினம் வரையான 7 நாட்களில் மட்டும் யாழ் மாவட்டத்தில் 20 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளது, இந்த மாதம் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கொவிட் தொற்றால் 69 பேரின் இறப்பு நிகழ்ந்துள்ளது இவற்றுடன் யாழ் மாவட்டத்தில் பதிவான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளதுனன் பத்தாயிரத்துக்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பிரதேச செயலாளர் பிரிவு ரீதியாக யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவில் அதிகளவாக 43 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளர், கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் 29, உடுவில் பிரிவில் 23, நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் 21, பருத்தித்துறை பிரிவில் 19, சங்கானை பிரிவில் 15, சண்டிலிப்பாய் பிரிவில் 14, சாவகச்சேரி பிரிவில் 11, தெல்லிப்பழை பிரிவில் 10, கரவெட்டி பிரிவில் 06, வேலனை பிரிவில் 05, காரைநகர் பிரிவில் 02, ஊர்காவற்றுறை பிரிவில் 02 பேர் என யாழ் மாவட்டத்தில் மரணங்கள் பதிவாகியுள்ளது.
No comments:
Post a Comment