திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 8 பேர் மரணித்துள்ள நிலையில் 143 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இந்த தகவலை திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் நிலையம் வெளியிட்டுள்ளது
இதனடிப்படையில் அதில் 78 ஆண்களும், 65 பெண்களும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்
மேலும் திருகோணமலை மாவட்டத்தில் 21-08-2021 வரை 7707 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும் அதில் 119 பேர் கர்ப்பிணி பெண்கள் எனவும் திருகோணமலை மாவட்ட சுகாதார சேவைகள் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் மாத்திரம் 202 பேர் இதுவரை மரணித்துள்ளதாகவும் தொடர்ந்து PCR, அன்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொறுப்பு வைத்திய அதிகாரி குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment