இன்றைய செய்தி

Post Top Ad

24 August 2021

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மதுப்பிரியர்களுக்கு ஆப்பு...!!!

 



இலங்கையில் மதுபானம் கொள்வனவு செய்யக்கூடிய வசதியுடைய, வறுமை கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்குவதை தவிர்க்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஸ்ரீலங்கா அரசாங்கத்தை கோரிக்கை விடுத்துள்ளது... 

அதாவது குறைந்த வருமானம் பெறக்கூடிய குடும்பத்தாருக்க மதுபானம் வாங்க முடியும் எனில் அவருக்கு அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கான இயலுமை உள்ளதாக கட்சியின் துணைத் தலைவர் செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா தொற்று காலத்தில்  நிவாரணம் பெறக்கூடிய குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களாக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட குடும்பங்களில் மதுபானம் கொள்வனவு செய்பவர்களின் தேசிய அடையாள அட்டையை பதிவு செய்யுது கொள்ளுமாறு அவர் மேலும் தெரிவித்தார். தனது ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள செந்தில் தொண்டமான், நாடு நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந் நிலையில், அதன்படி செயல்படுவது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும் என குறிப்பிட்டுள்ளார்.

இந் நெருக்கடி நிலையிலும் மதுபானங்களை கொள்வனவு செய்யக் கூடியவர்களுக்கு கொடுப்பனவுகளை விநியோகிப்பதை தவிர்ப்பதன் மூலம், நிவாரணம் பெறுவதற்கு அதிக தகுதியுள்ள குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகளை கொடுப்பது பாரிய உதவியாக அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் ஊரடங்கு உத்தரவு அரசாங்கத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு தலா 2000 ரூபாய் நிவாரணம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad