கல்விப் பொதுத்தரதார உயர்தர மற்றும் 5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை என்பவற்றிற்கு விண்ணப்பிப்பதற்கான கால வரையறை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்த ஆண்டுக்கான 5 ஆம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையை எதிர் வரும் நவம்பர் மாதம் 14 திகதியும் அதனை தொடர்ந்து நவம்பர் 15 தொடக்கம் டிசம்பர் 10 ஆம் திகதி வரை உயர்தர பரீட்சையையும் நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை விண்ணப்பிப்பங்கள் கடந்த ஜூலை மாதம் 5 ஆம் திகதி வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டு நவம்பர் 30 ஆம் திகதி நள்ளிரவிற்கு முதல் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது,
அதில் பாடசாலை பரீட்சார்த்திகள் பாடசாலை மட்டத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், தனிப்பட்ட பரீட்சார்திகள் இணையவழி ஊடாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோன தாக்கத்தின் காரணமாக எதிர்பார்க்கப்பட்ட அளவில் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறாமையினால் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை எதிர்வரும் மாதம் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment