நாட்டை முடக்குவது என்பது கொவிட் நோய் தொற்றுக்கெதிரான தீர்வாக ஒரு போதும் அமையாது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திஸ்சநாயக்க அவர்கள் கூறியுள்ளார்கள்.
இது தொடர்பாக அவர் உலகளாவிய ரீதியில் வைத்திய நிபுணர்கள் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையிலே கொவிட் தாக்கத்தை சாதாரண காய்ச்சல் என்று தான் கூறியதாக அவர் தெரிவித்தார்.
மேலும் தமது கருத்து தொடர்பாக விமர்சிப்போர் முதலில் உலகளாவிய ரீதியில் வைத்தியர்களின் ஆலோசனைகளை ஆராய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பாக பொதுஜன பெரமுன அலுவலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகச்சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்
அவர் மேலும் கூறுகையில் கொவிட் வைரஸின் தாக்கத்தை அடிப்படையாக கொண்டு நாட்டை முடக்கினால் மக்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்படுவதோடு தற்கொலை செய்யவும் முயற்சிப்பார்கள் என்றும் அவர் அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment