அம்பாறை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 602 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் இதில் கல்முனை பிராந்திய சுகாதார பிரிவில் மூவர் உயிரிழந்திருப்பதாக டாக்டர் வைத்திய கலாநிதி ஜு.சுகுணன் தெரிவித்தார்.
சுகாதாரம் சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 181 பேருமாக 602 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யபட்டுளளது.
ஆக கூடிய தொற்றாளர்கள் தெஹியத்தகண்டிய சுகாதாரம வைத்திய அதிகாரி பிரிவில் 135 பேரும், உகண சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 76 பேரும், மஹா ஓயா பிரிவில் 75 பேரும், தமண பிரிவில் 45 பேரும், லகுகல பிரிவில் 25 பேரும், பொத்துவில் பிரிவில் 31 பேரும், கல்முனை வடக்கு பிரிவில் 27 பேரும், மற்றும் நிந்தவூர் சுகாதார பிரிவில் 20 அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதுவரை அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 8299 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியதுடன் அவர்களில் 59 மரணங்களும் பதிவாகியுள்ளது, கல்முனை பிராந்தியத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 6002 ஆக அதிகரித்துள்ளதோடு 133 மரணங்களும் பதிவாகியுள்ளது.
கல்முனை பிராந்தியத்தில் தற்போது
1142 வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 4014 பேர் வீடுகளில் தனிமை படுத்தப்பட்டுள்ளனர் இதேவேளை கிழக்க மாகாணத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 35155 ஆக அதிகரித்துள்ளதுடன் இறந்தவர்களின் எண்ணிக்கை 579 ஆக அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment