நாட்டில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது தனிமை படுத்தல் ஊரடங்கு சட்டதினால் போக்குவரத்து தொடர்பான அனுமதி பத்திரங்கள் வழங்கப்படாது என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியும் பொலிஸ் ஊடகப்பேச்சாளருமான நிஹால் தல்துவ தெரிவித்தார்.
நாட்டில் தனிமை படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள இந்நிலையில் பொதுமக்கள் போக்குவரத்து அனுமதி பத்திரம் வழங்கப்படுமா என தொடர்ந்து பொலிஸாரிடம் கேட்டு வருகின்றனர் எனவே தான் இது தொடர்பாக தனிமை படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் எந்த விதமான போக்குவரத்து அனுமதி பத்திரமும் வழங்கப்படாது சிரேஷ்ட பொலிஸ் அதிகரி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர், தொழிலுக்காக செல்பவர்கள் நிறுவன பிரதானியிடம் கடிதம் ஒன்றை பெற்றுக்கொண்டு பயணிக்க முடியும் எனினும் விசேட காரணங்களுக்காக வெளியே செல்லும் போது
பயணத்திற்கான சரியான காரணத்தை கூறிவிட்டு பயணிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment