இன்றைய செய்தி

Post Top Ad

23 August 2021

கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சை - இன்று முதல் புதிய நடைமுறை....!!!

கொவிட்-19  தொற்றுக்குள்ளான நோயாளர்களை வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பமாகும் என இலங்கை சுகாதாரதுறை அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது .

தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருவதனால், குணங்குறிகள் அற்ற அல்லது சிறிய அளவிலான குணங்குறிகள் உள்ள நோயாளர்களை வீட்டிலேயே வைத்து சிகிச்சை அளிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

இது தொடர்பிலான அறிவுரை கோவை ஒன்றை சுகாதாரதுறை அமைச்சு வெளியிட்டுள்ளது.

மேலும் இது தொட‌ர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த விடயத்தை முன்னிலைப்படுத்தி சுற்றுநிருபம் ஒன்றை மாகாண, மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும் பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

தொற்றுக்குள்ளானவரை வைத்தியசாலையில் அனுமதிப்பதா அல்லது வீட்டில் வைத்து பராமரிப்பதா என்பது தொடர்பான தீர்மானத்தை குறிப்பிட்ட பிரதேசத்தின்  வைத்திய அதிகாரியே தீர்மானிப்பார். இந் நடைமுறையானது இரண்டு வயது தொடக்கம் 65 வயது வரையான அனைவருக்கும் ஏற்புடையதாகும்

வீட்டிலிருக்கும் நோயாளர்கள் தம்மை தாமே சிறந்த முறையில் தனிமைப்படுத்தி உரிய சுகாதார வழிமுறைகளை பேணுவதன் மூலம் விரைவில் குணமடைந்து கொள்ள முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

வீட்டில் தனிமை படுத்தப்பட்ட நோயாளர்கள் 14 நாட்களின் பின்னர் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியும் இது தொட‌ர்பாக பிசீஆர் அல்லது அன்டிஜன் பரிசோதனை ஒன்று மேற்கொள்ளப்பட்டு அதில் நெக்கட்டிவாக இருக்கும் பட்சத்திலேயே வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்க படுவார் 

No comments:

Post a Comment

Post Top Ad