நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள இந்நிலையில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு மிக முக்கிய அறிவுறுத்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தின் போது வழங்கப்பட்டுள்ள அனுமதியை சில அரச மற்றும் தனியார் துறையினர் முறைகேடான விதத்தில் பயன்படுத்தி வருவதாக தெரியவந்துள்ளது என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டிலுள்ள செல்வந்தர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களை, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுக்கப்படுவதோடு தேவையேற்பட்டால் குறிப்பிட்ட பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகரின் ஊடாக உரிய ஒழுங்கமைப்பினை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.
அத்தோடு ஊழியர்களை அழைப்பதற்காக வழங்கப்பட்டிருக்கம் அனுமதியை முறைகேடான விதத்தில் பயன்படுத்தாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம். காரணம் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் சிலர் சுகாதார விதிமுறைகளை மீறீ அநாவசியமாக வெளியிடங்களுக்குச் செல்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
No comments:
Post a Comment