டோக்கியா பரா ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்று உலக சாதனையை நிலை நாட்டி இலங்கைக்கு தங்கப் பதக்கம் வென்று கொடுத்த வீரர் தினேஷ் பிரியந்த ஹேரத்திற்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதாக பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியினை வெளியிட்டுள்ளார்.
மேலும் பிரதமர் தெரிவிக்கையில் பிரிவினைவாதத்திற்கெதிராக போராடி நாட்டை ஒன்றிணைக்கும் செயல்பாட்டில் தனது கடமையை சரிவர செய்து 2016 ஆம் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டியில் தாய்நாட்டிற்க்காக வெண்கல பதக்கம் வென்று கொடுத்தது குறிப்பிடத்தக்கது, அத்துடன் நாட்டிற்கு இரண்டு ஒலிம்பிக் பதக்கம் வென்று கொடுத்த ஒரே ஒரு முதலாவது வீரர் தினேஷ் பிரியந்த ஆவார் எனவும் பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
கொவிட் தொற்று நிலை காரணமாக பல தடைகளை எதிர் கொண்டு நாட்டிற்கு பெற்று கொடுத்த வெற்றி ஓட்டு மொத்த தேசத்திற்கும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது, ஏனைய வீர வீராங்கனை ஊக்கப்படுத்தி எமது தேசிய இலட்சணையை பதிப்பதற்கு இது உதவும் என நம்புகிறேன் என்று தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment