சர்வதேச கிரிக்கெட் மற்றும் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் சகல துறை ஆட்ட நாயகன் ஸ்டுவர்ட் பின்னி அறிவித்துள்ளார்.
இவர் இந்திய அணிக்காக 2014-2016 ஆண்டுகளிடையே நடைபெற்ற 6 டெஸ்ட் போட்டிகள் 14 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் 3 ரீ 20 சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ளார்.
மேலும் 1983 ஆம் ஆண்டு உலகக் கிண்ணம் வென்ற இந்திய அணியில் விளையாடிய ராஜர் பின்னியின் மகனான ஸ்ட்டுவர்ட் பின்னியின் வயது 37, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 194 ஓட்டங்களையும் 3 விக்கெட்டுக்களையும் எடுத்துள்ளார்.
ஒரு நாள் போட்டிகளில் 230 ஓட்டங்களையும் 20 விக்கெட்களையும், ரீ 20 போட்டிகளில் 24 ஓட்டங்களுடன் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
ஸ்ட்டுவர்ட் பின்னியின் மறக்கமுடியாத பந்து வீச்சு எதுவெனில் 2014 பங்களாதேஷ்க்கு எதிரான ஒருநாள் போட்டியொன்றில் அனில் கும்ளேயின் சிறந்த பந்து வீச்சு சாதனையை முறியடித்தார் அதில் 4.4 ஓவர்களில் 4 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை வீழ்த்தி பங்களாதேஷை 58 ஓட்டங்களுக்குள் முடக்கினார் இந்த பந்து வீச்சு உலக சாதனையில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment