பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதினின் மனைவி உட்பட 4 வரையும் செப்டம்பர் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ரஜுந்திர ஜயசூரிய உத்தரவிட்டார்.
பிணை மனு ரிசாட் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனாரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் மேலதிக நீதவான் ரஜுந்திர ஜயசூரிய உத்தரவினால் நிராகரிப்பு செய்யப்பட்டது.
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன் வீட்டில் பணி புரிந்த 16 வயதுடைய தலவாக்கலை-டயகம பகுதியைச் சேர்ந்த சிறுமி மரணமடைந்த வழக்கில் ரிசாட் பதியுதீன் உட்பட மனைவி, மனைவியின் தந்தை, மைத்துனர், சிறுமியை வேலைக்கு சேர்த்துவிட்ட தரகர் என விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment