இன்றைய செய்தி

Post Top Ad

25 August 2021

கட்டாய நடைமுறைக்கு கொண்டு வர உள்ள டிஜிட்டல் சுகாதார அட்டை, சுகாதார அமைச்சு தெரிவிப்பு..!!!

 



கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தப்பட்ட தனிநபர்களுக்கு டிஜிட்டல் அட்டை வழங்கும் செயற்றிட்டமானது செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு பிறகு ஆரம்பிக்கப்படவுள்ளதாக  சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

செப்டெம்பர் ஆரம்பத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட 75% வீதத்தினருக்கு இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி அவ்வாறு தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்கு டிஜிட்டல் தடுப்பூசி அட்டையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் நேற்றைய தினம் 161,650 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதுடன், இதுவரையில் இலங்கையர்களுக்கு 5,949,431  தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தெரிவித்துள்ளது..

No comments:

Post a Comment

Post Top Ad