கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்படும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் தலா 10,000 ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொருட்களை இனி வரும் காலங்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தினருக்கு மாத்திரம் வழங்குவதற்கு கடந்த 23 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விடயம் தொடர்பக பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணி வெளியிட்ட அறிக்கையில் இவ் விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment