இன்றைய செய்தி

Post Top Ad

25 August 2021

அரச ஊழியர்களிர் சம்பளத்தை கோர முடியாது, பாராளுமன்ற உறுப்பினர்கள் இம்ரான் மகுரூப் தெரிவிப்பு..!!

 



கொவிட் நிதியத்திற்கு அரச ஊழியர்கள் சம்பளத்தை கோருவது  ஏ‌ற்று‌க் கொ‌ள்ள முடியாத ஒன்று என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகுரூப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில் '' மருத்துவ உபகரணங்களுக்காக எமது கட்சி ஆரம்பித்த கொவிட் நிதியத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் தமது ஒரு மாத சம்பளத்தை வழங்க முன்வந்ததைப் போன்று சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அவ்வாறு தங்களது ஒரு மாத சம்பளத்தை கொவிட் - 19 நிதியத்திற்கு வழங்க முன்வந்ததுள்ளது மகிழ்ச்சியாகவுள்ளது.

இருப்பினும் இது போன்று அரச ஊழியர்களும் இவ்வாறு த‌ங்களது சம்பளத்தை வழ‌ங்க வே‌ண்டு‌ம் எ‌ன்று கோரிக்கை விடுப்பது நியாயமற்றது, இது வரை அரச ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படவில்லை 

அத்துடன் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது இதனால் அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் சில அரச ஊழியர்கள் சம்பளம் பெற்று அடு்த்த நாளிலே கடலன் பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர் இவ்வாறு இருக்க அரச ஊழியர்களின் சம்பளத்தில் பாதியை கேட்பது முறையற்ற ஒன்று என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகுரூப் குறிப்பிட்டார்.


மேலும் அவர் கூறுகையில் கொவிட் - 19 தொற்று தொடர்பாக இலங்கைக்கு பல தரப்பட்ட நாடுகளில் இருந்து, தனியார் நிறுவனங்களில் இருந்து, தனவந்தர்கள், நன்கொடையாக கொடுத்த பணத்திற்கு என்ன ஆனது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளதுடன் அது தொடர்பான கணக்கு அறிக்கை இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

இவ்வாறு இருக்க எதை நம்பி அரச ஊழியர்கள் தமது சம்பளத்தை வழங்குவார்கள் என்று கேள்வி எழுப்பியதுடன் அரசாங்கத்தின் ஆடம்பர செலவை குறைத்தாலே பெரும் தொகை பணத்தை சேமிக்கலாம் இதற்கு ரோஹித ராஜபக்ஷ அனுப்பிய செயற்கை கோளே இப்போது நியாபகம் வருவதாக அவர் நினைவு கூறினார். அந்த திட்டத்திற்கு 320 மில்லியன் செலவானதாக கூறப்படுகிறது அந்த செயற்கை கோளுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை எனவும் குறிப்பிட்டார். 

No comments:

Post a Comment

Post Top Ad