வருமானத்தை இழந்துள்ள பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அடுத்த வாரம் தொடக்கம் நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகள் யாவும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
இதனை விட வருமானத்தை இழந்துள்ள பஸ் ஊழியர்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்குரிய பணத்துக்கான வவுச்சர்களும் வழங்கப்படவுள்ளன. இந்த நிவாரண செயற்றிட்டமானது அடுத்த வாரம் தொடக்கம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். இதேவேளை அத்தியாவசிய சேவைகளுக்காக தனியார் பேருந்துகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பதினையும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment