நாட்டில் கொரோனா வைரஸ் பரவலானது மிகவும் தீவிரமாக ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவும் ஆற்றல் கொண்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் செனால் பெர்ணான்டோ இதனை அறிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது உள்ள நிலையின் ஆபத்தை உணராமல் இருந்தால் நாட்டை மீண்டும் முடக்கும் நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்தோடு, நாட்டின் பொருளாதாரமும் என்றுமில்லாதவாறு பாரிய சரிவை சந்திக்குமெனவும், இதை யாராலும் தடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பிரதான பொறுப்பை தேசிய தொற்று நோய் பிரிவினருக்கு வழங்குவதோடு அதன்மூலம் சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கீழ் 6 உப குழுக்களை நியமிக்குமாறும் அவர் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment