இலங்கையின் ஏழு அறிவினை கொண்ட புதிய நிதியமைச்சர் வந்தப்பின் எல்லாம் தலைகீழாக மாறிவிடும் என்று கூறியபோது இருந்ததை விட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்ததோடு நாட்டின் பொருளாதாரமும் சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது என எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.
இதுவரை வழங்கப்பட்ட 5000 ரூபா நிவாரணத்திற்கு பதிலாக தற்போது 1998 ரூபா ஏமாற்று நிவாரணப் பொதியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்ததோடு அதனை இலவசமாக விநியோகிப்பதாகவும் பொய்யான தகவல்களையும் வௌியிடுகிறார்கள்.
கடந்த வாரம் 160 ரூபாவாக இருந்த ஒரு கிலோ சீனியின் விலை இந்தவாரம் 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விலை கட்டுப்பாட்டில் அரசாங்கத்தின் இயலாமை வௌிப்படுகிறது.
நாட்டில் உள்ள சுகாதார அமைச்சர்க மருந்து தட்டுப்பாடு இல்லை என்று கூறிக்கொள்வதோடு பின் கதவு வழியாக தூதரகங்களிடம் மருந்துகளை கோருகின்ற நிலமையே தற்போது நிலவுகிறது நாட்டு மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கத்தினால் முடியவில்லை.
No comments:
Post a Comment