கோவிட் நோய் தொற்று காரணமாக நாட்டில் விற்றமின் சீ, விற்றமின் டீ ஆகிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் கோவிட் தொற்று வேகமாக பரவி வரும் இந்நிலையில் தொற்றாளர்களை வீடுகளில் வைத்து சிகிச்சையளிக்கும் முறையும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் கோவிட் தொற்றிலிருந்து பாதுகாப்பை பெற நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்க கூடிய விற்றமின் சீ, விற்றமின் டீ ஆகிய மாத்திரை வகைகளை பயன்படுத்துமாறு மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ள நிலையில் வவுனியா மாவட்டத்தில் பலரும் விற்றமின் சீ மற்றும், விற்றமின் டீ ஆகிய மருந்துகளை அதிகளவில் கொள்வனவு செய்து செல்வதனால் பல தனியார் மருந்தங்களில் விற்றமின் சீ மற்றும் விற்றமின் டீ மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் தனியார் மருந்தகங்களில் விற்றமின் சீ, விற்றமின் டீ வாங்கசெல்லும் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதையும் அவதானிக்க முடிவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அத்தோடு பரசிட்டமோல் மருந்துக்கான கேள்வியும் தற்போது அதிகரித்துள்ளமையால் சில மருந்தகங்களில் அதன் இருப்பு முடிவடையும் நிலையில் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment