பிரதமர் மஹிந்த ராஜபக்ச, சுகவீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என பிரதமர் அலுவலக பணிக்குழாம் பிரதானியும் மகிந்தவின் மகனுமான யோஷித்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சிறந்த உடல்நலத்துடன் இருப்பதோடு வழமை போன்று தனது பணிகளையும், கடமைகளையும் மேற்க்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனவே இவ்வாறான முறையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்தோடு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வௌியான தகவல் எதுவும் உண்மை இல்லை என பிரதமரின் செயலாளாளரான காமினி செனரத் லங்கா கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில் நேற்று காலை இடம்பெற்ற கொரோனா ஒழிப்பு ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் கலந்து கொண்டு பகல் உணவும் உட்கொண்டதாக காமினி செனரத் கூறினார். அதன்படி பிரதமர் நலமுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்
No comments:
Post a Comment