இன்றைய செய்தி

Post Top Ad

31 August 2021

நள்ளிரவு முதல் ஜனாதிபதி அதிரடியாக அமுல்படுத்திய அவசர கால சட்டம்!!



அத்தியாவசிய பொருள் விநியோகத்திற்கான அவசர சட்ட விதிமுறைகளை நேற்று 30ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுல்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் இரண்டாவது சரத்தின் பிரகாரம், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இதனை அமுல்படுத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை தெரிவிக்கின்றது. இதற்கமைய நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பதுக்கிவைத்தல், அதிக விலைக்கு விற்றல், உள்ளிட்ட செயற்பாடுகளின் ஊடாக நுகர்வோரை அசௌகரியத்துக்கு உள்ளாகும் சந்தை முறைக்கேடுகளை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அரசாங்கத்தின் உறுதிப்பாட்டு விலை அல்லது சுங்கம் இறக்குமதி செய்த விலை என்பவற்றை அடிப்படையாகக்கொண்டு, மேற்படி உணவு பொருட்களை கொள்வனவு செய்வதோடு மக்களுக்கு நியாயமான விலையில் விற்பனை செய்வதற்கம் அங்கீகாரம்பெற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கும், அரச வங்கிகளின் ஊடாக மொத்தக் கொள்வனவுக்காக வழங்கப்பட்டுள்ள கடனை, கடன் பெற்றவரிடம் அறவீடு செய்து இதை நடைமுறைக்கு கொண்டு வருவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad