இன்றைய செய்தி

Post Top Ad

24 August 2021

அரச ஊழியர்களின் சம்பளம் குறையாது. அரசாங்கம் அறிவித்தது...!!





அரசு துறை ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என அரசாங்கம் இன்று  அறிவித்துள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறும் போதே அமைச்சரவையின் இணை பேச்சாளர்களில் ஒருவரான அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவ்வாறு தெரிவித்தார்.

ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட்-19 நிதிக்கு நன்கொடையாக அளிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதுடன் இது அரசு துறையில் உள்ளோருக்கு ஊதியக் குறைப்புக்கான முயற்சியல்ல எனவும் அவர் தெரிவித்தார். 


No comments:

Post a Comment

Post Top Ad