கட்டார் எயார்வேஸ் விமானம் மூலமாக 76 ஆயிரம் டோஸ் பைசர் தடுப்பூசிகள் இன்று(23) காலை நாட்டை வந்தடைந்தன.
இதேவேளை 1 மில்லியன் சினோபாம் தடுப்பூசிகள் நாளை இலங்கைக்குக் கொண்டுவரப்படவுள்ளன.
மேலும் 2 மில்லியன் டோஸ் சினோபாம் தடுப்பூசிகள் ஓகஸ்ட் மாத இறுதிக்குள் இலங்கைக்கு கிடைக்கப்பெறும் என இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.
சீனா இதுவரை 13.98 மில்லியன் சினோபாம் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்கியுள்ளதாக சீனத் தூதரகம் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது..
No comments:
Post a Comment