லீட்ஸ் இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆவது போட்டி லீட்ஸில் உள்ள ஹெட்டிங்லே ஸடேடியத்தில் நடைபெறுகிறது..
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 78 ஓட்டங்களுடன் சுருண்டது, இதன் பின்னர் தனது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட்டின் சதத்தினால் 121 ஓட்டங்களுடன் 432 ஓட்டங்களை குவித்தது.
இதன் பின் 354 ஓட்டங்களால் பின் தங்கிய நிலையில் இருந்த இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடியது, நேற்று முன்தின ஆட்டமுடிவில் இந்தியா அணி 80 ஓவர்களில் 2 விக்கெட்களுக்கு 215 எடுத்திருந்தது.
புஜாரா 91 ஓட்டங்கள் (180 பந்து 15 பவுண்டரி), விராட் கோலி 45 ஓட்டங்கள் (94 பந்து 6 பவுண்டரி) என்றவாறு களத்தில் இருந்தனர். மேலும் 28 ஆம் திகதி இடம்பெற்ற ஆட்டத்தின் போது புஜாரா சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது எனினும் ஓட்டங்கள் எதுவும் பெறாத நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை தந்தார், கேப்டன் விராட் கோலி அரைசதம் அடித்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.
மேலும் ரஹானே 10 ஒட்டங்களுடனும், ரிஷாப்பண்ட் மற்றும் ராபின்சன் 1 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்ததோடு இதன் பின்னர் வந்த பின்வரிசை வீரர்களும் தொடர்ந்து ஆட்டமிழந்தனர் இதனால் இந்திய அணி 99.3 ஓவர்களில் 10 விக்கெட்டுக்களை இழந்து 278 ஓட்டங்களை மாத்திரம் பெற்று படு தோல்வியடைந்தது.
No comments:
Post a Comment