இன்றைய செய்தி

Post Top Ad

29 September 2021

17 வயது சிறுமி துஷ்பிரயோகம் சந்தேகநபர் கைது...!




திருகோணமலை சேருநுவர பகுதியின் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட   17 வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் அடுத்த மாதம் ஒக்டோபர் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கு மூதூர் நீதிமன்ற நீதிவான் இன்றைய தினம் 29 உத்தரவிட்டார்.

முட்டுச்சேனை, மாவடிச்சேனை, வெருகல் பகுதியினைைச் சேர்ந்த 20 வயதான நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறிப்பிட்ட சந்தேக நபர் அதே பகுதியினைச் சேர்ந்த 17 வயதான சிறுமி ஒருவரை இரண்டு மாதங்களாக காதலிப்பதாக அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு சந்தேக நபரிற்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்களால் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் குறிப்பிட்ட சந்தேகநபர் மூதூர் நீதவான் நீதிமன்றம் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது விளக்கமறியலில் உத்தரவிட்டார்

 பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

No comments:

Post a Comment

Post Top Ad