இன்றைய செய்தி

Post Top Ad

01 September 2021

அரசாங்கம் கடுமையான நிதி நெருக்கடியில் நிதி அமைச்சர் தெரிவிப்பு...!!

 



கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள நதி நெருக்கடியால் அரசாங்கம் தனது செலவினங்களை குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கொரோன தொற்றினால் நாட்டின் பொருளாதாரம் பதிக்கப்பட்டுள்ளமையும் அரசாங்கத்தின் வருமானமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவி்த்துள்ளார்.

அத்துடன் இந்த ஆண்டின் தொடர்ச்சியான செலவு 2 லட்சத்து 69 ஆயிரத்து 400 கோடி என கணக்கெடுக்கப்பட்டுள்ளது, தடுப்பூசிகள் மற்றும் சுகாதார சேவை மேம்பாடுகளை முன்னெடுக்க செலவுகள் மேலும் அதிகரிக்கும் என்று அவர் கூறினர்.

இவ்வாறான நிலையில் அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ள போதிலும் இதுவரை தொடங்கப்பட்ட திட்டங்கள், கொள்வனவு, கட்டிடங்கள் நிர்மாணித்தல் சீரமைத்தல் போன்ற செயற்படுங்களை நிறுத்தி வைக்குமாறு நிதி அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் இதுவரை நியமனம் கடிதம் வழங்கப்படாத வெற்றிடங்களுக்கு ஆட்ச்சேர்ப்பு செய்வதும் நிறுத்தப்பட்டுள்ளது, அத்துடன் குறைந்த வருமானம் பெருவோருக்கு மாத்திரம் மானியம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அமைச்சு மற்றும் நிறுவன பிரதானிகளுக்கு கொடுக்கப்படும் எரிபொருள் கொடுப்பனவுகளை சேவைக்கு வருகை தரும் திகதியன்றே கொடுக்க முடியும் என்று அறிக்கை சமர்ப்பிக்குமாறு நிதி அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து நேற்றைய அமைச்சரவையில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரண நாட்டிலுள்ள நிதி நெருக்கடியினால் அமைச்சுக்களில் உள்ள குறைக்ககூடிய செலவினங்களை குறைத்து அதனை கட்டுப்படுத்தி நிதி கட்டுப்பாட்டை முன்னெடுத்து செல்லுமாறு நிதி அமைச்சரினால் அறிவிக்கப்பட்டது எ‌ன்று தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

No comments:

Post a Comment

Post Top Ad