இன்றைய செய்தி

Post Top Ad

30 September 2021

திருத்தியமைக்கப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டல்கள் இதோ...!

 



நாளைய தினம் முதலாம் திகதி அக்டோபர் மாதம் அதிகாலை 4 மணியளவில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட உள்ள நிலையில் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இரவு பத்து மணியிலிருந்து அதிகாலை 4 மணி வரை தேவையற்ற பயணங்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது மருந்து விற்பனை நிலையங்கள், பல்பொருள் அங்காடி நிலையங்கள் திறந்திருக்க அனுமதிக்கப்படும், முதலாம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் வைக்கப்பட இருக்கின்ற பதிவு திருமணங்களுக்கு 10 பேர் மாத்திரமே அனுமதிக்கப்பட வேண்டும் 15ஆம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் திருமண வைபவங்களுக்கு 50 பேர் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

மேலும் நாளை முதலாம் திகதி தொடக்கம் 15ம் திகதி வரையான காலப்பகுதியில் சம்பவிக்கும் கொரோனா அல்லாத மரண சம்பவங்களுக்கு 10 பேர் மாத்திரம் அனுமதிக்கப்படுவார் அது 15ஆம் திகதிக்கு பின்னர் நிகழும் மரண சம்பவங்களுக்கு 15 பேர் ஆக அனுமதிக்கப்படுவார் அத்துடன் இறுதிக்கிரியைகள் 24 மணித்தியாலத்திற்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.

பேருந்துகளின் ஆசனங்களுக்கு ஏற்ப மக்களை ஏற்றி பிரயாணம் செய்ய அனுமதிக்கப்படுவர் மீறப்படும் பட்சத்தில் அது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அத்தியாவசியத் தேவைகள் தவிர்ந்த ஏனைய விடயங்களுக்கு மாகாணங்களுக்கு இடையில் செல்ல தடை அமுலில் இருக்கும், மேலும் குளிரூட்டப்பட்ட வாகனங்களில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் வாகனங்களின் ஜன்னல் கதவுகள் திறந்து வைத்திருக்க வேண்டும்.

பணிக்கு அழைக்கப்படும் ஊழியர்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருக்க வேண்டும் என்பதுடன் முடிந்த அளவில் வீட்டிலிருந்து பணிகளை மேற்கொள்வது சிறந்தது பணிக்கு அழைக்கப்படும் ஊழியர்களின் எண்ணிக்கையை தீர்மானிப்பது நிறுவன பிரதானியை சாரும்.

ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம் 15ம் திகதி வரையான காலப்பகுதியில் உணவகங்கள், திரையரங்குகள், திருவிழாக்கள் போன்ற மக்கள் ஒன்று கூடும் இடங்களுக்கு தடை அமுலில் இருக்கும் தேவாலயங்கள், கோவில்கள், விகாரைகள் என்பவற்றை இடம்பெறும் பொதுக் கூட்டங்கள் மற்றும் மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

விவசாய நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது மற்றும் சிகை அலங்கார நிலையங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுவார், பல்கலைக்கழகம் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் சுகாதார வழிகாட்டுதல்களுடன் திறப்பதற்கு அனுமதி உண்டு, தொழிற்சாலைகள் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைவாக செயற்பட முடியும், மேலும் வழங்கப்பட்டுள்ள சுகாதார நடவடிக்கைகளுக்கு அமைவாக பரீட்சைகளை நடாத்த முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad