நாட்டில் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் மக்களிடையே பெரும்பாலும் தயக்கம் காட்டப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது குறிப்பாக பாலியல் சம்பந்தமான பிரச்சினைகளை தடுப்பூசியினால் எதிர்கொள்ள வேண்டி வரும் என மக்களிடையே மாற்றுக் கருத்து நிலவுகிறது எனவேதான் இதற்கு தீர்வு வழங்கும் பொருட்டு அனுராதபுர போதனா வைத்தியசாலையின் பாலியல் நோய் தொடர்பான விசேட வைத்தியரான அஜீத் கரவிட்ட தெரிவித்ததாவது, கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதினால் எந்த விதமான பாலியல் பிரச்சனைகளும் ஏற்படாது என சர்வதேச ஆராய்ச்சிகள் சுட்டிக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே சமூக ஊடகங்கள் மற்றும் பிற தளங்களில் ஆதாரமற்ற முறையில் பரப்பப்படும் வதந்திகள் நம்ப வேண்டாம் என்பதுடன் மக்கள் அச்சம் இன்றி கொவிட் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார் இதுதொடர்பாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட அஜித் கரவிட்ட இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment