எதிர்வரும் அக்டோபர் மாதமளவில் பாடசாலைகளை மீள திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது இதன்படி அவ்வாறு பாடசாலைகள் திறக்கப்படும் பட்சத்தில் டிசம்பர் மாதமளவில் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் விடுமுறை ஆனது இம்முறை வழங்கப்படமாட்டாது என கல்வி அமைச்சின் பேராசிரியர் கபில பெரேரா அவர்கள் கூறியுள்ளார்.
மேலும் பாடசாலைகளை திறப்பதற்கு நான்கு கட்டங்களில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதன்படி 200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை முதலில் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் அந்த வகையில் தரம் 1 தொடக்கம் 5 வரையான வகுப்புகளை உடைய பாடசாலைகளிலும் மீள திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்
No comments:
Post a Comment