நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினை எதிர்வரும் முதலாம் திகதி தளர்த்தப்பட உள்ள நிலையில் அதனை மேற்கொண்டு நீடிக்காமல் இருப்பதற்கு அரசாங்கத்தினால் முழு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பிரதிசுகாதாரப் பணிப்பாளரும் விஷேட வைத்தியருமானே ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்தார் மேலும் நாடு மீள திறக்கப்படும் பட்சத்தில் மக்கள் அனைவரும் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் அத்துடன் கௌரவ ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களினால் சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய பரிந்துரைகள் முன்வைக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது
அதன்படி சுகாதாரம் மற்றும் போக்குவரத்து துறைகளில் பரிந்துரை முன்வைக்கப்பட உள்ளது
No comments:
Post a Comment