ஐந்து முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நாளைய தினம் 22 ஆம் திகதி அனைத்து பிரதான வைத்தியசாலைகளின் முன்னிலையில் போராட்டங்கள் இடம் பெறும் என ஐக்கிய சுகாதார தொழிலாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இப் போராட்டம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்னதாக மதியம் 12.00 மணியளவில் போராட்டம் ஆரம்பமாகும் என்பதுடன அனைத்து மருத்துவமனைகளின் முன்பும் ஒரே நேரத்தில் போராட்டம் நடத்தப்படும் என்றும் சங்கத்தின் பொதுச் செயலாளர் வண. தம்பிட்டியே சுகதானந்த தேரர் தெரிவித்தார்.
இந்த போராட்டத்திற்கு பின்னும் அரசாங்கம் தங்களது கோரிக்கைகளுக்கு பதிலளிக்கவிடின் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் எந்தவித தயக்கமும் காட்டமாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.
சுகாதார பணியாளர்களின் கோரிக்கை மற்றும் அனைத்து சுகாதார பணியாளர்களுக்கும் கொரோனா அபாயக் கொடுப்பனவை வழங்குதல், தொழிலாளர் பற்றாக்குறைக்கு நிவர்த்தி, அக்ரஹார கொடுப்பனவை வழங்கல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தப்பட இருப்பதாக அவர் கூறினார்.
No comments:
Post a Comment