இன்றைய செய்தி

Post Top Ad

22 September 2021

104 கிலோ கேரள கஞ்சா தொகை மீட்கப்பட்டுள்ளது...!

 


மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்ப்பட்ட இலுப்பைக்கடவியின்  கத்தாளம்பிட்டி பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை கேரள கஞ்சா பொதிகளை நேற்றைய தினம் 21 ஆம் திகதி அதிகாலை விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது


விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் மூலம் நேற்று 21 அதிகாலை இலுப்பைக்கடவை கத்தாளம்பிட்டி பகுதிக்குச் சென்ற விசேட அதிரடிப் படையினர் 4 மூடைகளில் பொதி செய்யப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர்.


இவ்வாறு மீட்கப்பட்ட கஞ்சா பொதி 104 கிலோவும் 750 கிராம் எடை உடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களாக எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் மீட்கப்பட்டுள்ள கஞ்சா பொதி இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை இலுப்பைக்கடவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad