ஐபிஎல் லீக் தொடரின் கடைசி இரு ஆட்டங்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 8 ஆம் தேதி இரவு ஏழரை மணி அளவில் ஆரம்பிப்பதற்கு ஐபிஎல் நிர்வாகம் தீர்மானித்துள்ளது. காரணம் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறுதல் கருத்துகணிப்பு கணக்கியல் ரீதியாக எந்த அணிக்கும் அது சாதகமாக அமைந்து விடக்கூடாது என்பதற்காக ஐபிஎல் நிர்வாகம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
இதன்படி ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக இவ்வாறு ஒரே நேரத்தில் இரண்டு ஆட்டங்கள் நடைபெற இருக்கின்றது இதில் டெல்லி கேப்பிடல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன.
மேலும் ஐபிஎல் போட்டிகளில் புதிதாக இணையவுள்ள இரு அணிகள் குறித்தும் ஐபிஎல் ஒளிபரப்பு தொடர்பான ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான தகவல்களும் வெளியாயின,
அதன்படி ஐபிஎல்லில் புதிதாக இணையவுள்ள இரு அணிகள் தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் 25 ஆம் திகதி ஒக்டோபர் மாதமளவில் வெளியிடப்படும் எனவும் அன்றே 2023 தொடக்கம் 2027 வரையான காலகட்டங்களில் ஐபிஎல் நிகழ்ச்சியினை ஒளிபரப்பு உரிமம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ், சோனி ஜி தொலைகாட்சிகள் இடம் வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது தற்போதைய ஒளிபரப்பு உரிமம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இடம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment