இன்றைய செய்தி

Post Top Ad

25 September 2021

நடிகர் விஜய் பயந்து விட்டார் பிரபல தயாரிப்பாளர் தெரிவிப்பு...!


 தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் பயந்து விட்டார் என்று பிரபல தயாரிப்பாளரான கே. ராஜன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இது தொட‌ர்பாக சென்னையில் ருத்ரன் என்னும் இயக்குனரின் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார் தயாரிப்பாளர் கே. ராஜன் கூறியிருப்பதாவது, மணல் கொள்ளை  மற்றும் ஆணவக்கொலையை எதிர்த்து படம் எடுத்தால் அந்த படத்திற்கு சென்சரில்் பிரச்சினை வருவதுு சாதாரணமான ஒன்றுதான்.


குறிப்பாக மெர்சல் படத்தின் ஜி எஸ் டி தொடர்பான பிரச்சினைக்கு நடிகர் விஜய்க்கு 12 மணி நேரம் மன அழுத்தம் கொடுத்துவிட்டார்கள், நெய்வேலி படப்பிடிப்பு தளத்தில் இருந்தவரை சென்னை அழைத்து வந்து விசாரித்தனர். 


மேலும் காரில் விஜயை அழைத்து வரும் போது என்ன செய்தார்களே தெரியவில்லை அந்தப் படத்தின் பின்னர் மத்திய அரசு விஜையை விமர்சிப்பதே இல்லை, விஜய் பயந்து போய்விட்டார் அவர் கோடீஸ்வர் பணம் அதிகமாக உள்ளவர்களுக்கு ஆண்மை போய்விடுகிறது, இதனால் எங்களைப் போன்ற ஏழைகள் எப்போதும் எதிர்த்து நிற்போம் என்று அவர் கூறினர். 

No comments:

Post a Comment

Post Top Ad