இன்றைய தினம் 26 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தின் சில இடங்களில் காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணி வரையிலான மின்வெட்டு அமுல்படுத்தப்பட இருப்பதாக இலங்கை மின்சார சபை அறுவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் சில இடங்களில் புணரமைப்பு செய்யப்பட இருப்பதனாலே இவ் மின் வெட்டு அமுல்படுத்தப்படுவதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதன்படி புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று 26 தேராவில் பகுதியிலிருந்து வட்டுவாகல் வரை மின்சாரம் தடைப்பட்டிருக்கும் இதன்படி புதுக்குடியிருப்பின் தேராவில், உடையார்கட்டு, வள்ளிபுனம், தேவிபுரம், கைவேலி, புதுக்குடியிருப்பு நகர்பகுதி, ஊடாக மந்துவில், ஆனந்தரபும், இரட்டைவாய்க்கால், முள்ளிவாய்க்கால் வட்டுவாகல் வரை மின்சார தடை அமுலில் இருக்கும் என முல்லைத்தீவு மின்சாரசபை அலுவலகம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment