மடுவில் இருந்து ஒரு 5 கிலோமீட்டர் தூரத்தில் 15 நாட்களுக்கு முன்பு சில விசமிகளால் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளையார் சிலை நேற்றைய தினம் அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டுள்ளது.
சில இனம் தெரியாத விசமிகளினால் அவ்விடத்தில் இருந்த பிள்ளையார் சிலை நீக்கப்பட்டு அந்த இடத்தில் அந்தோனியார் சிலை வைக்கப்பட்டிருந்தது, இது மன்னார் மாவட்டத்தில் பரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது இது தொடர்பான விசாரணைகளை மேற்க்கொள்ள மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் பெரிய பண்டிவிரிச்சான் சமய ஆர்வலர் சிலரைக்கொண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு அவ்விடத்தில் மீண்டும் பிள்ளையார் சிலை வைக்கப்பட்டது, இது தொடர்பாக அங்கிருந்த மக்கள் கூறியதாவது 40 ஆண்டுகளுக்கு மேலாக அந்த சிலை அங்கிருந்தாகவும் இது காடு வழி எனபதால் அந்த வழியாக செல்லும் எந்த மதத்தினரும் இப்பிள்ளையாரை வணங்கிச் செல்வதாகவும் கூறினர்கள்.
மேலும் இங்கு இவ்விடத்தில் சிறிய கோயில் ஒன்று அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டு முதலில் மூலஸ்தானம் அமைக்கப்பட்டு அதில் சிலை வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment