எதிர் வரும் நாட்களில் பாடசாலைளை 4 ன்கு கட்டங்களின் கீழ் ஆரம்பிப்பதற்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார் இது தொடர்பாக கொவிட்-19 தடுப்பு செயலணியோடு கல்வியமைச்சும் இணைந்து குழு ஒன்றினை அமைத்திருப்பதாகவும் அதன் மூலம் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு அமைவாக எதிர் வரும் காலங்களில் 4 கட்டங்களாக பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் என்று அவர் கூறினர். இதனை நேற்றையதினம் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கல்வி அமைச்சின் செயலாளர் இதனை தெரிவித்தார்.
தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக குழந்தைகள் நோய் விஷேட வைத்தியரின் பூரண அனுமதி கிடைத்தவுடன் 12 தொடக்கம் 19 வயது வரை உள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும், இது தொடர்பான ஆயத்தங்களை அவ் பிரதேச சுகாதார மற்றும் வைத்தியர்களின் ஆலோசனைகள் அறியப்பட்டு பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பின் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கபடும் என்று குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment