இன்றைய செய்தி

Post Top Ad

29 September 2021

திருமண வைபவங்கள் மற்றும் மக்கள் ஒன்று கூடும் பொது நிகழ்வுகள் தொடர்பாக வெளியான தகவல்..!

 




நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி தளர்த்தப்பட உள்ள நிலையில்  திருமண வைபவங்கள் மற்றும் மரண சடங்குகள் என்பவற்றிற்கு மக்களை அனுமதிப்பது தொடர்பாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி திருமண வைபவங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளுடன் குறைந்தளவிலான மக்களை கொண்டு வீடுகளிலேயே திருமணம் நடத்த அனுமதிக்கப்படுவார் என்றும், மேலும் மரணச் சடங்குகள் பொது நிகழ்வுகளுக்காக மக்கள் ஒன்று கூடுதல் போன்றவற்றிற்கான திருத்தியமைக்கப்பட்ட புதிய சுகாதார நடைமுறைகள் எதிர்வரும் 30ஆம் திகதி மேற்கொள்ளப்படும் இறுதி தீர்மானத்தின் அடிப்படையிலேயே நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

மேலும் நாடு முழுமையாக திறக்கப் பட்டாலும் இரவு நேரங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக கலந்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad