அரசாங்கத்தின் வினைத்திறனற்ற செயற்பாட்டினால் மீளவும் வரிசையில் நிற்கும் யுகத்தை நோக்கி தள்ளப்பட இருப்பதாக முன்னாள் அமைச்சரும், ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் தவிசாளருமான வஜிர அபேவர்த்தன அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார், இதன்போது கூறிய அவர், நாட்டின் தற்போதைய அரசாங்கம் சர்வதேச ரீதியில் நாட்டை சரிவர கையாளவில்லை இதனால் நாட்டில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் இதன் காரணமாக நாடு மீண்டும் வரிசையில் நிற்க கூடிய ஒரு யுகத்தை சென்றடைய தயாராக உள்ளது,
மேலும் கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் ஓகஸ்ட் மாதம் வரையில் நாடு பாரிய நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது மக்களும் பெரும் கஷ்டங்களை உள்ளாகியுள்ளனர் .
வரலாறுகளைப் பொறுத்த மட்டில் நாடு ஒவ்வொரு முறையும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகும் போது பொருளாதார ரீதியிலான அழிவையே நாடு எதிர்கொண்டது அவ்வாறான சூழ்நிலைகளில் நாட்டை மீளவும் கட்டியெழுப்புதல் என்பது ஐக்கிய தேசிய கட்சியினால் மட்டுமே சாத்தியமானது என்பது குறிப்பிடதக்கது என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment