எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் நாடு முழுமையாக திறக்கப்படுமா அவ்வாறு திறக்கப்படும் பட்சத்தில் கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டு வருகின்ற முதலாம் திகதி முதல் நாடு திறக்கப்படலாம் என ராகம மருத்துவ பீட சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜுன டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
அதிக நாட்கள் நாடு முடக்கப்பட்டிருந்தபடியினால் கொவிட் பரவலில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியினை காணக்கூடியதாக உள்ளது என்பதுடன் அவ்வாறு நாடு திறக்கப்பட்டால் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களை 25% மானோரைக்கொண்டு இயங்கும் வரையறை கடைபிடிக்க வேண்டும் என்பதுடன் பொதுப் போக்குவரத்தின் போது 50% மான பயணிகளை மாத்திரம் ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினர்.
திருமணம் மற்றும் விருந்துஉபசார நடவடிக்கைகளுக்கு தற்போது அனுமதிக்க முடியாது என்பதுடன் கொவிட் பரவல் 70/80 % மளவில் குறைவடையும் போது இதற்கான அனுமதி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment