பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா தனக்கான சொந்தத் திரையரங்கம் ஒன்றை திறந்து வைத்துள்ளார்.
‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதிலும் பிரபலமான நடிகராக வலம்வந்தவர் விஜய் தேவரகொண்டா. தெலுங்கில் வெளியான இந்தப்படம் தமிழ் , ஹிந்தி மற்றும் இன்னும் சில மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதனால் விஜய் தேவர்கொண்டவிற்க்கு கிடைத்த வரவேற்பு பிற எந்த நடிகருக்கும் கிடைத்திருக்கவில்லை.
அத்துடன் ‘கீதா கோவிந்தம்’ ‘டியர் காம்ரேட்’ போன்ற படங்களில் நடித்து தெலுங்கின் முன்னனி நடிகர்களுள் ஒருவராக வலம்வந்தார். மேலும் தமிழிலெ ‘நோட்டா’படம் மூலம் அறிமுகமாகிய விஜய் தேவர்கொண்டா ரசிகர்கள் மத்தியில் முன்னனி இடத்தை பிடித்துக் கொண்டார்.
இந்நிலையில் விஜய் தேவரகொண்டா ஹைதராபாத்தில் சொந்தமாக திரையரங்கம் ஒன்றைக் கட்டி வந்ததுடன் அதற்கு.´ஏவிடி சினிமாஸ்´ எனப் பெயரிடப்பட்டார் இந்த திரையரங்கத்தினை கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி திறந்து வைத்தார். தற்போது அந்தத் திரையரங்கில் நாகர்ஜூனாவின் மகனான நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி கூட்டணி இணைந்து ‘லவ் ஸ்டோரி’ திரைப்படம் இன்று செப்டெம்பர் 24வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment