இன்றைய செய்தி

Post Top Ad

24 September 2021

ஸ்பெயின் நாட்டில் வரலாறு காணாத மழை..!

 



அடைமழையின் காரணமாக ஸ்பெயினின் முக்கிய மாகாணமான ஹூல்வா மற்றும் படாஜோஸ் ஆகியன மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இது தொட‌ர்பாக கூறுகையில் இம்முறை என்றும் இல்லாதவாறு அடைமழை பெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் குறிப்பாக ஹூல்வா மற்றும் படாஜோஸ் மாகாணங்கள் பாரியளவிலான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

வெள்ளத்தில் பல பொருட் சேதங்கள் உள்ளாகியுள்ளதை   காணொளி காட்சிகள் மூலம் காணக்கூடியதாக உள்ளது.

மேலும் அங்கு  மோசமான வானிலை நிலவி வருவதனால் மழைக்கான செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது தாழ்வான பகுதிகளில் மேலும் பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியம் அதிகமாக காணப்படுவதால் அங்கு  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Post Top Ad