எதிர் வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி தொடக்கம் தனியார் பயணிகள் பேருந்து நடத்துனர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து மாகாண போக்குவரத்து அதிகார சபையின் தலைவர்கள் தகவல் வெளியிட்டுள்ளது.
அதனடிப்படையில் ஒக்டோபர் 1 ஆம் திகதி தொடக்கம் தனியார் பேருந்து ஊழியர்கள் மற்றும் நடத்துனர்கள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக் கொண்டிருக்க வேண்டும்.
வீதிப் போக்குவரத்து அதிகார சபையின் ஊடகவியலாளர் சந்திப்பு தம்புள்ளையில் இடம்பெற்றது இதில் கலந்து கொண்ட அமைப்பின் தலைவர் நிலந்த ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில் அவர் மேலும் தெரிவித்ததாவது பேருந்து ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க, ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைவாக பயணிகளை ஏற்ற வேண்டும் என்பதுடன் அரச தனியார் துறை ஊழியர்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் மற்றும் அதிக பணம் அறவிடக்கூடாது என்று பேருந்தில் வெற்றிலை மெல்லுதல், புகைப்பிடித்தல் என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது இது தொடர்பான முழு பொறுப்பும் பேரூந்து ஊழியர்களையே சாரும். இவற்றை கண்காணிக்க பரிசோதகர்கள் சிவில் உடையில் ஈடுபட உள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக பதிக்கப்பட்டுள்ள தனியார் பேருந்து ஊழியர்களுக்கு வருடாந்தம் 50000 வழங்குவதற்க்கான பெக்கேட்ஜ் முறை ஒன்று அறிமுகப்படுத்த இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment