தம்புள்ளை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் படுக்கையறையில் பிணமாக கிடந்துள்ள சம்பவம் தொடர்பாக அந்த பகுதியில் பதட்டம் நிலவி உள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக நபரொருவர் சாட்சியை வழங்கியுள்ளார், அதில் குறித்த சிறுமியை இருவர் அழைத்து சென்றதாகவும் ,அவர்கள் கணவன் மனைவி என்றும் அவர் சாட்சியம் வழங்கியுள்ளார்.
மேலும் குறித்த சந்தேக நபர்கள் விசாரிக்கப்பட்ட போது அவர்கள் நீண்டகாலமாக வீடுகளை மாற்றிக் கொண்டிருப்பதும் விசாரணைகள் மூலம் தெரிய வந்தது.
நேற்றைய தினம் 11ஆம் தேதி வழங்கப்பட்ட சாட்சியத்தால் சந்தேக நபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு மரணமடைந்த சிறுமியின் உடல் தம்புள்ள ஆதார வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment