நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து போக்குவரத்து கட்டணத்திலும் மாற்றம் ஏற்படுமா என்ற ரீதியில் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
இது தொடர்பாக போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளதாவது, நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்க பட்டதனால் போக்குவரத்து கட்டணங்களில் எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படுத்த தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என அவர் தெரிவித்தார்.
எனினும் போக்குவரத்து கட்டணத்தை உயர்த்துமாறு தனியார் துறை பேருந்து ஊழியர்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது, எரிபொருள் விலை அதிகரிக்கப்படவில்லை அவ்வாறு அதிகரிக்கப்படும் பட்சத்தில் அது தொடர்பாக போக்குவரத்து கட்டணங்கள் உயர்வு தொடர்பாக அறிவிக்கப்படும் என அவர் கூறியிருந்தார்.
No comments:
Post a Comment