தனியார்துறை ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது எல்லை திருத்தி அமைப்பதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி தனியார் துறை ஊழியர்களின் ஓய்வு பெரும் குறைந்தபட்ச வயதை திருத்தம் செய்வதற்கான சட்டமூலம் 2021 மார்ச்23 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அதற்கமைய தயாரிக்கப்பட்ட சட்டமூலம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வர்த்தக துறை மற்றும் ஆடைக் கைத்தொழில் போன்ற துறைகளில் தாக்கம் செலுத்தும் கொள்கை ரீதியான விடயங்கள் பற்றி ஆராயுமாறு அனைத்து தரப்பினருடனும் பங்கேற்று கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதன்படி அதில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள சட்டம் நடைமுறைக்கு அமைவாக 52 வயதை எட்டாத ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக நீடிப்பதற்கும், இந்த சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் திகதியில் இருந்து 52 வயது அல்லது அதற்கு கூடுதலான வயதுடையவர்கள் குறைந்தபட்சம் 59 வயது வரை பணியாற்றுவதற்கு இயலுமானவரை ஏற்பாடுகளை உருவாக்கப்பட்டு சட்ட வரைஞரினால் தனியார் துறை ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தொழில் உறவுகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment